செந்தமிழ்சிற்பிகள்

ச.தண்டபாணியார் (1903 - 1990)

ச.தண்டபாணியார் (1903 - 1990)

அறிமுகம்

சிதம்பரத்தை அடுத்துள்ள நன்னிலம் திருகைட்டங்குடி கிராமத்தில் சடையப்ப தேசிகர் மற்றும் பாலம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1903 -ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி ச.தண்டபாணி தேசிகர் பிறந்தார். 

சு.பொன்னோதுவார் மூர்த்திகள் மற்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரிடம் கல்வி கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவன் எனும் பட்டம் பெற்றார்.  

தமிழ்ப் பணி 

கலைஞர் மு. கருணாநிதி, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் ஆசிரியராக திகழ்ந்த இவர் மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 

படைப்புகள் 

  • தண்டபாணி தேசிகர் அவர்கள் சைவத்தின் மறுமலர்ச்சி, முருகன், ஆடவல்லான் மற்றும் திருமந்திரம் விளக்கக் கூடிய பஞ்சாச்சர தீபம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். 
  • திருக்குறள் உரைக்களஞ்சியம், ச.தண்டபாணி தேசிகர் அவர்களால் பழைய உரையாசிரியர்களின் உரைகளைத் தொகுத்தும், வேண்டிய இடத்து விளக்கமும் முடிபும் வழங்கப்பட்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழி வெளியிடப்பட்டுள்ளது . 

விருதுகள் /சிறப்புகள் 

  • இந்திய அரசு இவரது வாழ்நாள் பணிகளுக்காக பத்ம பூஷன் விருது தந்து பெருமைப்படுத்தியுள்ளது.
  • திருவாடுதுறை ஆதீனம், பஞ்சாட்சர தீபம் நூலுக்காக மகாவித்துவான் என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
  • தமிழக அரசு இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி திருவள்ளுவர் விருது  தந்து பெருமைப்படுத்தியுள்ளது.
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 
  • புதுவைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கி.வேங்கிட சுப்ரமணியம் தலைமையில் 1000 வெண்காசுகளுடன் முதுமுனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.